குருநாகலில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த 70 வயதுடைய தாயான சந்திரா பியசிலியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 15ஆம் திகதி மாலை திடீரென மாரடைப்பு காரணமாக சஞ்சீவ, சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை வீட்டிற்கு தெரிவிக்கும் போது தாய் சந்திரா பியாசிலி நெஞ்சு வலிப்பதாக கூறி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.