பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றது.
தினமும் முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி தினசரி முட்டை சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு அபாயம் 90 சதவீதம் குறைவடைகிறது.
முட்டையை தனியாக சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களுக்கு முட்டை சிறந்த தெரிவாக காணப்படுகின்றது.
இது உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது, மேலும் பசியைக் குறைக்க பெரிதும் துணைப்புரிகிகின்றது.
முட்டைகள் அதிக சத்து கொண்டவை மற்றும் மலிவு விலையில் கிடைக்கின்றன. ஆரோக்கியமான மற்றும் நிலையான சத்துக்களை கொண்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் முட்டையுடன் சில உணவுப்பொருட்களை ஒருபோதும் சேர்த்து சாப்பிடவே கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. இது குறித்து நம்மில் பலரும் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு.
அந்தவகையில் முட்டையுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை மற்றும் முட்டை ஆகிய இரண்டிலும் அதிகளவில் அமினோ அமிலங்கள் காணப்படுவதால், இவை இரண்டின் கலவை உடலுக்கு நச்சுத்தன்மையாக மாறக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே இதனை சேர்த்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நம்மில் பலரும் காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்ளுவது வழக்கம். அப்படி காலை உணவுடன் டீ அல்லது காபி குடிப்பது பெரும்பாலானவர்களுக்கு விருப்பமாக இருக்கும்.ஆனால் முட்டையுடன் இவற்றை பருகும் போது அஜீரண கோளாறு, மலச்சிக்கல், செரிமான பிரச்சினை மற்றும் வாயு தொல்லைக்கு வழிகோளும்.
முட்டையை பால் பொருட்களுடன் உண்ணுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. காரணம் இவை இரண்லும் புரதம் அதிகமாக இருப்பதால் உடவில் புரத்தின் அளவு அதிகரிக்கும் ஆனால் உடலால் உறிஞ்சப்படும் அளவு குறைவாகவே இருக்கும்.
முட்டையுடன் இறைச்சி வகைகளை சாப்பிடுவதால் அவை சமிபாடடைய அதிகளவு ஆக்ஸிஜன் தேவையை ஏற்படுத்தும். இதனால் இவற்றை சேர்த்து சாப்பிடுவது சோம்பல் உணர்வை ஏற்படுத்தும்.
முட்டையை சாப்பிட்ட உடன் ஒருபோதும் வாழைப்பழம் சாப்பிட கூடாது. இவை இரண்டின் கலவை வயிற்று உப்புசம் மற்றும் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும்.
அது போல் முட்டை மற்றும் மீன் ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது. இவை இரண்டின் கலவை சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.