மட்டக்களப்பு மாவட்டத்திலும் இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில 4 இலட்சத்தி 49 ஆயிரத்தி 606 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி. பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 442 வாக்களிப்பு நிலையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.
தேர்தல் கடமை
13,116 போர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்ததாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்களும், 1514 காவல்துறையினரும், தேர்தல் கடமையில் ஈடுபட உள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ,கல்முனை,ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு, வாக்கு சாவடிகளுக்கு காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
தமிழ் பொது வேட்பாளர்
528 வாக்களிப்பு நிலையங்களில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் நான்கு ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர்.
இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 184653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளனஅத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
அத்தோடு, தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பவ்ரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.