பொலன்னறுவையில் உள்ள புலஸ்திபுர விஜித ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டு வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்றையதினம் (21-09-2024) பிற்பகல் உயிரிழந்திருப்பதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தேர்தல் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி திடீரென உயிரிழப்பு!
பொலிஸ் அதிகாரியின் இந்த திடீர் உயிரிழப்பு குறித்து பொலனறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.