இன்று இடம்பெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் இன்று காலை வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்த அவர்,
“எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த வரிசையை நானே உருவாக்கினேன். நாடு ஸ்திரமற்ற நிலையில் இருந்திருந்தால் இன்று வாக்களிக்க முடியாது.
இந்த தேர்தல் இலங்கையில் ஒரு திருப்புமுனையாகவும், நாட்டை அழித்த பாரம்பரிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளில் இருந்து விடுபட்டு நாட்டில் புதிய சமூக மற்றும் அரசியல் அமைப்பை கட்டியெழுப்புவதற்கான பெறுமதியான சந்தர்ப்பம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.