இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இவ்வாறானவொரு நிலையில் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்து தனது முகநூலில் கருத்து தெரிவித்து வந்த சாவகச்சேரியின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி அருச்சுனா நடந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரியவருகின்றது.
இது தொடர்பாக பலரும் தமது கருத்துக்களை முகநூலில் பதிவிட்டு வருவருதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.