முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் தனது வீட்டில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியான இடியன் துப்பாக்கியினை வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (24.09.2024) வசந்தபுரம், மன்னாகண்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் 67 அகவையுடைய சந்தேக நபரின் வீட்டில் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இடியன் துப்பாக்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரையும்,சான்றுப்பொருளையும் மீட்ட பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.