நடிகர் ஜெயம் ரவி, மனைவி- ஆர்த்தி மீது புதிய புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஜெயம் ரவி – ஆர்த்தி
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Brother படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து சர்ச்சை பாரியளவில் வெடித்து கொண்டிருக்கிறது.
மாறாக ஜெயம் ரவி சென்ற கோவா பயணம் குறித்து ஏகப்பட்ட சலசலப்புகள் வெளியாகி வருகின்றது.
என்னுடைய உடைமைகள் வேண்டும்!
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் வெளியில் வந்த ஜெயம் ரவி ஒரு முடிவுகளை மீடியாக்களிடம் ஓபனாக கூறியுள்ளார்.
அதாவது, “ சில தினங்களுக்கு முன்னர் தனது சமூகவலைதளப் பக்கத்தின் Password மனைவி ஆர்த்தியிடம் இருந்து மீட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஆர்த்தியின் வீட்டில் உள்ள தனது உடமைகள் இருப்பதாகவும் அதனை மீட்டுத் தரக்கோறியும் அடையார் துணை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.