தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலாம் பாகம் வினாத்தாளில் ஐந்து வினாக்கள் வட்சப் மூலம் கசிந்தமை தொடர்பில் ஆசிரியரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் குருநாகலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவராவர்.
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதன்கிழமை (25) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.