இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் 9 புதிய ஆளுநர்கள் இன்றையதினம் (25-09-2024) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பான முழு விபரம் இதோ,
1.மேற்கு மாகாண ஆளுநராக ஹனிஃப் யூசுப் (எக்ஸ்போ லங்கா குழுமத்தின் நிறுவனர்)
2.வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் (முன்னாள் ஜி.ஏ. யாழ்ப்பாணம்)
3.சப்ரகமுவ மாகாண ஆளுநராக அதிகாரி அப்புஹாமில்லகே சம்பா ஜானகி ராஜரத்ன, (ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)
4.வடமேற்கு மாகாண ஆளுநராக திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய (முன்னாள் செயலாளர் விவசாய கால்நடை நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு)
5.தென் மாகாண ஆளுநராக மத்தும கங்கணமலகே பந்துல ஹரிச்சந்திர (முன்னாள் மாவட்ட செயலாளர்)
6.வடமத்திய மாகாண ஆளுநராக வசந்த ஜினதாச (ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)
7.கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர (முன்னாள் துணைவேந்தர் யு.வி.ஏ வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்)
8.மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன்
9.ஊவா மாகாண ஆளுநராக ஜெயசேகர முதியன்சேலாகே கபில ஜெயசேகர (முன்னாள் அமைச்சின் செயலாளர்)