நடிகைகள் இணையத்தில் படவாய்ப்பிற்காக அரைகுறை ஆடையுடன் புகைப்படங்கள் பகிர்வது நல்லதல்ல என்பதை பற்றி பயில்வான் ரங்கநாதன் சமூக வலைத்தளத்தில் பேசி சர்ச்சையை கிளப்பியுள்யார்.
பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா பிரபலங்களை பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவருபவர். இதனால் இவர் இணையத்தில் ஏதாவது ஒரு விடயம் பேசி வீடியோ வெளியிட்டால் அத கட்டாயம் ஏதாவது பிரபலங்களின் சர்ச்சையான விடயங்களை பெசியிருப்பார் என்பது இப்போது அனைவர் இடத்திலும் பழக்கமாகி விட்டது.
இவர் திரையுலகை சேர்ந்
தவர்கள் பற்றி அவர் பேசிவரும் விஷயங்கள் பல நேரங்களில் அருவெருக்கத்தக்க வகையில் இருக்கும். அனைத்தையும் இவர் அருகிலிருந்து பார்த்தது போல்தான் பேசுவார். இந்த நிலையில் தான் இவர் நடிகைகளின் ஒழுக்கம் பற்றி பேசியுள்ளார்.
அதிலும் இவர் பேசுவதற்கெல்லாம் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார்.அவர் பேசும் போது “சினிமாவில் தனி மனித ஒழுக்கம் என்பது 99 விழுக்காடு இல்லை. நான் சொல்லும் அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரம் இருக்கிறது. நடிகைகள் வாய்ப்புகளுக்கு சோஷியல் மீடியாவில் ஆபாச புகைப்படங்களை பதிவு செய்கிறார்கள்.
ஆனால் அதைப் பற்றி நான் பேசினால் தவறு என்று சொல்கிறார்கள். சினிமாவில் உள்ள அனைவரையுமா நான் விமர்சிக்கிறேன். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களைத்தான் விமர்சிக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் உண்மையோடும் மனசாட்சியோடும் வாழ வேண்டும்.
நான் யாரைப் பற்றி பேசினாலும் அதற்கான ஆதாரத்தை வைத்துக்கொண்டுதான் பேசுவேன். ஆனால் சிலர் என்னிடம் சினிமாவில் இருக்கும் நீங்களே இப்படி பேசலாமா என்று கேட்கின்றனர்.
சினிமாவில் இருந்தால் என்ன நான் குறை சொல்ல கூடாதா?சினிமாவில் இருக்கும் எல்லோருமே தவறானவர்கள் இல்லை. ஆனந்த்ராஜ், நதியா மாதிரி சில பேர் விதி விலக்காகவும் இருக்கிறார்கள்.
எத்தனையோ நடிகர் நடிகைகள் தங்கள் வாரிசை நடிக்க வைக்கவில்லை. அவர்கள் எல்லாம் ஒழுக்கமானவர்கள். இந்த விடயத்தில் சினிமாவில் இருக்கும் எல்லோருமே தவறானவர்கள் கிடையாது.
என கூறி தனது உரையை அவர் முடித்தார்”. இந்த நிலையில் இவர் பேசியதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த விடயம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.