இலங்கையில் முதன் முறையாக விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா என்பவரே பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் விமானப்படையில் உள்ளவர்கள் அப் பதவியை வகித்ததில்லை.
அதேசமயம் முன்னாள் பாதுகாப்பு செயலராக இருந்த ஜெனரல் கமல் குணரத்ன, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிய வருகிறது.