கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை நேற்று (25) ஆரம்பித்தார்.
சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமான பயணம்
நேற்று (25) காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் ஆரம்பித்த பயணம் முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமானது.
சிறுவனின் சாதனை பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களுமாக இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மேலும் சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்துள்ள நிலையில் டியோஜனின் முயற்சி எவ்வித தடங்கல்கள், ஆபத்துக்களுமின்றி பாதுகாப்பாக வெற்றிபெற வேண்டும் என பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.