களனி வெளி ரயில் பாதையில் பெங்கிரிவத்தை ரயில் கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ரயில் பாதையில் உள்ள மதகு ஒன்றின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கடவை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு இலங்கை ரயில்வே திணைக்களம் மக்களை கோரியுள்ளது.