கண்டி – பதுளை பிரதான வீதியில் பெலிஹுலோயா பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் சக்கரமொன்று பழுதடைந்ததால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மண்மேட்டில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, பஸ்ஸின் சாரதியும் மூன்று பாடசாலை மாணவர்களும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.