ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றமடைந்ததன் காரணமாக சுயாதீனமாக செயற்படும் மத்திய வங்கி ஆளுநரும் நிதிச் சபையும் மாற வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதிச் சபையின் உறுப்பினர்களது தனிப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பதவி விலகலாம் எனினும் பொதுவாக அவ்வாறு பதவி விலக வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய மத்திய வங்கி சட்டத்தின் கீழ் நிதிச்சபை மற்றும் ஆணையாளர் குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவிக் காலத்தில் உச்ச அளவில் சேவையை வழங்கும் பொறுப்பு தமக்கு உண்டு என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.