396 தேசிய பாடசாலைகளின் அதிபர்களை உள்ளடக்கிய விசேட செயலமர்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கல்வி சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
குறித்த செயலமர்வு ஐந்து வருட இடைவெளியின் பின்னர் நேற்றையதினம் (28.09.2024) கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை நிதி மேலாண்மை, உட்கட்டமைப்பு மற்றும் தேசிய பள்ளிகளின் மேற்பார்வையின் போது, அடையாளம் காணப்பட்ட பொதுவான சவால்கள் குறித்து இந்த நிகழ்வில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தநிலையில், நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், கல்வி முறையை அரசியலற்றதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கல்வியில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பாகும்.
வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், மதிப்பு சார்ந்த சமூகத்தை கட்டியெழுப்புவதையும் கல்வி நோக்கமாகக் கொண்டது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.