ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு 24 மணித்தியாலங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மற்றுமொரு முக்கிய அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதன்படி லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் ஹெஸ்புல்லாவின் தெற்கு முன்னணியின் தளபதியான அலி கராக்கி கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அலி கராக்கியின் மரணத்தை ஹெஸ்புல்லா இன்று உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன