அல்பேட்டா மாகாணத்தில் பாரிய டைனோசர் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த டைனோசர் ஒன்றின் தலைப் பகுதி இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டையோட்டின் எடை சுமார் 272 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கிரான்ட் பியரெரே பகுதியில் இந்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது.
இந்த வகை டைனோசர்கள் தவார உண்ணிகள் எனவும் இராட்சத விலங்குகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மண்டையோடு மட்டும் குட்டி யானையொன்றின் அளவு பெரியது என தெரிவிக்கப்படுகின்றது.