யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த சிங்களப் பெண் வைத்தியர் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அவரை தனது அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார்.
இதனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதய வைத்திய அதிகாரி ரஜீவ் உடனடியாக தனது ராஜினாமாக் கடிதத்தை வழங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைச் சமாளிக்கும் முயற்சியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை வைத்தியர் ரஜீவ் ஏற்கனவே மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் அலுவலகத்தில் திட்டமிடல் அதிகாரியாக கடமையாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.