யாழ் சாவகச்சேரி பகுதியில் திருணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்று மாலை 6:00 மணியளவில் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் யாழ் சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் தந்தையான வினோத் வயது 29 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பலம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.