முல்லைத்தீவு மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கான விலை மாற்றங்கள் நாளை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இதனால் வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
அத்துடன், விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நிலத்தை பண்படுத்துவதற்கு உளவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
அதேவேளை, போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளிற்கு டீசல் இல்லாத காரணத்தினால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு லீட்டர் டீசல் 307 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.