ஐந்து சிறுமிகளை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 64 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த அழைப்பு
08 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் நபர் ஒருவர் தொடர்பில் காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) கிடைத்த தகவலுக்கு அமைய கண்டி (kandy)சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் அங்கு சென்று இவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
வன்கொடுமைக்கு உள்ளான ஐந்து சிறுமிகள் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.