இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே. கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் இருக்கும் எரிபொருள் கையிருப்பானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் போதுமானதாகும். அத்துடன் அடுத்தகட்ட எரிபொருள் கையிருப்புக்கான ஆணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.