பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை விரைவில் குறைக்க தீர்மானித்துள்ளதாக காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கம் (FLGIG) தெரிவித்துள்ளது.
காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் புத்திக விமலசிறி நேற்று(02.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை விரைவில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.
மேலும் அரசாங்கமொன்று பதவிக்கு வந்ததும் பல விடயங்களை எதிர்பார்க்கும் இந்த சமூகத்தில் நாட்டின் தொழில்துறையினரும் வடிவமைப்பாளர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியம்.