பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல குழந்தைகளுக்கு இன்னும் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்தினால், அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அந்தந்த மாவட்டச் செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இந்த சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.