ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்செ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிரசாரம்
அன்ட்ரே பிரான்சே, ஜனாதிபதி அநுரகுமாரவை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்து இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரடகனம் மற்றும் நீதியான பிரசாரம் என்பன குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்கள் சவால் மிக்கவை எனவும், மக்கள் அதிகளவில் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் மோசடி
வறுமை ஒழிப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான முனைப்புக்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரான்சே உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு பூரண ஆதரவினை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.