வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருடன் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக அலுவலக நேரங்களில் கலந்துரையாடுவதற்காக ஏற்கனவே பொது மக்கள் தினமாக ப்தன் கிழமை இருந்தது.
இந்நிலையில் மக்கள் சந்திப்பு புதன்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமையினை பொதுமக்கள் தினமாக மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் புதிய ஜனாதிபதியாக அனுர குமார பதவியேற்ற பின்னர் வடக்கு ஆளுநராக நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.