போதியளவிலான பயணிகள் இன்மையால் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை (chennai) விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், இலங்கை (srilanka) , பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 இடங்களுக்கு விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பயணிகளின் விமானப் பயணச்சீட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவில்லை என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்ற வெள்ளிக்கிழமை போதிய பயணிகள் இன்மையாலும் நிர்வாகக் காரணங்களாலும் ஐந்து வருகை விமானங்களும், புறப்பாடுச் செல்ல வேண்டிய ஐந்து விமானங்களும் மொத்தமாக 10 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை (srilanka) மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமானச் சேவைகள் நேற்று (4.10.2024) மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
ஈரான் – இஸ்ரேல் மோதல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில்இ இன்று முதல் மீண்டும் இடம்பெறுகின்றன.