நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நாட்டின் பல்கலைக்கழக அமைப்பில் 12,992 விரிவுரையாளர்கள் காணப்பட வேண்டிய நிலையில், இன்று வரை 6,548 விரிவுரையாளர்கள் மாத்திரமே பணியில் ஈடுப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, அரச பல்கலைக்கழகங்களில் 6,444 விரிவுரையாளர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், சில பல்கலைக்கழக பாடநெறிகளை நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குறிப்பிடுகின்றது.
அத்துடன், தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் அதிக தேவை உள்ள பாடங்களுக்கு மாணவர் சேர்க்கையை மட்டுப்படுத்த சில அதிகாரிகள் முன்மொழிவதாக மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் தெரிவித்துள்ளார்.