இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர மீதான ஆதரவு அலை கொஞ்சம் குறையத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக அவர் பதவி ஏற்ற பின் முன்னை அரசின் ஊழல்கள் பற்றி பல செய்திகள் வெளிவந்து மக்களை உசுப்பேத்தினாலும் , ஊழல் பற்றிய ரிப்போர்ட் வெளிவருவது மட்டுமே நடக்கிறது , ஆனால் அது மீது எந்த நடவடிக்கையும் எடுபடவில்லை என்பது மக்களை அநுர மீதும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வைத்துள்ளது.
குறிப்பாக அநுர அரசும் , அவரது கட்சியும் பார் லைசன்ஸ் விடயத்தில் அவசரப்பட்டு அறிக்கை விட்டு மூக்கை உடைத்துள்ளனர். மதுபானகடை லைசன்ஸ் விடயம் உண்மை என்றாலும், எந்த அரசியல் வாதியும் ஆதாரங்களை தங்கள் பெயரில் விட்டு வைக்காமல் வேறு ஒருவரின் பெயரில் உரிய ஆவணங்களை கொடுத்தே பார் லைசன்ஸ் பெற்றதால், அநுர கட்சி நினைப்பது போல எதுவும் செய்ய முடியாத நிலை.
விக்கி ஐயா போன்ற விளக்கம் குறைவான ஒரு சிலரே சொந்த பெயரில் கடிதம் கொடுத்து மாட்டிக் கொண்டனர். அதுவும் வெறும் ரெக்மென்டேஷன் கடிதம். அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அது தவிர அநுரவின் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அவருக்கு அறுதிப்பெரும்பான்மை பாராளுமன்றில் தேவை. அவர் நினைத்தபடி எம்பி மற்றும் , அரச ஊழியர்களின் வரப்பிரசாதங்களை குறைக்க முடியாது .
பாராளு மன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது போனால், அவருடைய எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் போகும். அவர் வெற்றி பெற்றபின் பெருகிய ஆதரவு அலையில் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டாயம் கிடைக்கும் என்ற நிலை தென்பகுதியில் ஏற்பட்டது.
பிள்ளையானுக்கும், டக்ளசுக்கும் அமைச்சு பதவி
ஆனால் , ஊடகங்கள் எல்லாம் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுத்து , பின்பு எதுவும் நடக்காமல் போக , ஆதரவு அலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளதாக தென்பகுதி செய்திகள் சொல்கின்றன.
அதுதான் அவசரமாக நேற்று ஊழலுக்கு எதிரான சில கைதுகள் நடைபெற்றன. அவை வெறுமனே அலுவலகத்தில் ஒரு லட்சம் , இரண்டு லட்சம் லஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள். அந்த செய்திகள் அரசு நினைத்தது போல பெரிய வைரலாகவில்லை.
இப்போதைய நிலையில் அநுர பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டுமானால் , அவர் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன மிகப்பெரிய கைதுகள் , விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். இல்லாது போனால் , அவர் பிள்ளையானுக்கும், டக்ளசுக்கும் அமைச்சு பதவி கொடுத்துதான் ஆட்சி நடத்த வேண்டிய நிலை வரலாம்.