பிக்பாஸ் 8 தமிழ் சீன ஆரம்பித்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த 24 மணிநேரத்தில் மூட்டை முடிச்சியை கட்டிக்கொண்டு வெளியேறிய போட்டியாளர் தொடர்பில் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெகு பிரபலம். கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் இம்முறை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி உள்ளார்.
நிகழ்ச்சியை விஜய் சேதுபதி, , எதார்த்தமாகவும் இடையிடையே நக்கலோடு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது, பல ரசிகர்களை கவர்ந்தது.
சீசன் 8 இல் ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொண்ட நிலையில், இவரைத் தொடர்ந்து சாஞ்சனா நேமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், அர்னவ், பவித்ரா ஜனனி, அருண் பிரசாத், தார்ஷிகா, விஜே விஷால், முத்து குமரன், சௌந்தர்யா நஞ்சுட்டன், ஜாக்குலின், என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரூல்சும் புதுசாகவே உள்ளது. பொதுவாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் ஒரு வாரம், அல்லது இரண்டு வாரத்திற்கு பின்னரே நாமினேட் செய்து எலிமினேட் செய்யப்படுவது வழக்கம்.
வந்த ஒரே நாளில் வெளியேறிய நடிகை
ஆனால் இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திலேயே மற்ற போட்டியாளர்கள் நேரடி நாமினேஷன் செய்து அதிலிருந்து ஒரு போட்டியாளர் 24 மணி நேரத்தில் வெளியே அனுப்ப்ப்பட்டுள்ளார்.
‘மகாராஜா’ பட நடிகை சாச்சனா தான் , முதல் நாளே பிக் பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாச்சனா விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர். எனவே இவருக்கு மட்டும் விஜய் சேதுபதி, உனக்கு என்னை அப்பானு கூப்பிட தோணுச்சுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிட தோணுச்சுனா சார்னு கூப்பிடு என சிறப்பு சலுகை கொடுத்தார்.
இந்நிலையில் வந்த 24 மணி நேரத்தில் அவர் வெளியேறி உள்ளமை பிக்பாஸ் , ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒன்று.