முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான “ஐக்கிய ஜனநாயக குரல்” என்ற புதிய அரசியல் கட்சி இன்று புதன்கிழமை (09) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவிக்கையில்
எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது.
ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.