தென்னிலங்கையில் தந்தையை பார்க்க சென்ற மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றும் 54 வயதான வஜிர பிரியன் என்ற குடுபஸ்தரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து காரணமாக நேற்று பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரி, விடுமுறையில் தந்தையை பார்ப்பதற்காக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிசிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.