அரச இலக்கிய விருது வழங்கும் விழா மற்றும் அரச சிறுவர் நாடக விழா என்பவற்றை தற்காலிகமாக இரத்துச் செய்வதற்கு பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி அரச இலக்கிய விருது வழங்கும் விழாவும், நவம்பர் 9 ஆம் திகதி அரச நாடக விழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய இது தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், நிகழ்வுகள் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.