கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.