இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.இதற்கு முன்னதாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அறிவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் தேர்தல் பிரசாரக் கூட்டமும் கிளிநொச்சி பூனகரி பிரதேசத்திற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.