அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி பணத்திற்காக சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை செய்த நபரை 1,225 லீற்றர் டீசலுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அனுராதபுர விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், விசேட அதிரடிப்படையின் தம்புள்ளை முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று கலென்பிந்துனுவெவ, மொரகொட மீகஸ்வெவ, நாமல்புர பிரதேசத்தில் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
அப்போது, பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,225 லீற்றர் டீசல் மற்றும் அது தொடர்பான உபகரணங்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொரகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.