மாத்தளையில் உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
மாத்தளை நாவுல மின்சார சபைக்கு முன்பாக இன்று (18) இந்த விபத்து ஏற்பட்டது.
உந்துருளியில் பயணித்த மாணவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
16 வயதுடைய பிரமோத் சத்சர என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்தார்.
கெப் ரக வாகனத்தின் சாரதி நாவுல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.