கொள்ளை மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் இருவரும் கந்தானை பிரதேசத்தில் வைத்து 21 மற்றும் 48 வயதுடையவரகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து, கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் முறைப்பாடு வழங்கப்படுள்ளது.
அதோடு மல்வத்துஹிரிபிட்டிய மற்றும் வெல்வேரி ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.