நுவரெலியா, வலப்பனை, படகொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 21 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று 18) இடம்பெற்றுள்ளது. சுகயீனமுற்ற மாணவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சுகயீனமுற்ற மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.