இலங்கையிலுள்ள எட்டிற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்கச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டுச் சபை தெரிவித்துள்ளது.
அரச வைத்தியசாலைகள் அமைப்பில் தற்போது மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக கதிரியக்கச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது மருத்துவ சேவைக்கு தேவையான ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வது இடைநிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக CT ஸ்கேனர், MRI ஸ்கேனர் மற்றும் இதய வடிகுழாய் அலகுகளில் பல பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.