வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சேவைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உரிய முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த மார்க்கத்தில் ரயிலை இயக்க முடியாது என ரயில் கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கோட்டையில் இருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.