முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ளார். தொலைபேசியினை திருத்தி பெற்றும் சென்றுள்ளார்கள்.
இந்த நிலையில் இவ்வாறு கொடுக்கப்பட் தொலைபேசியில் இருந்த யுவதியின் படங்கள் திருடப்பட்டு இன்னெரு இளைஞனின் கைக்கு மாறியுள்ளது.
அதன் பின்னர் அந்த இளைஞன் யுவதியினை தொடர்பு கொண்டு அவரின் அந்த அந்தரங்க படங்களை அனுப்பி மறைமுகமாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றுது
இந்நிலையில் முல்லைத்தீவில் உள்ள குறித்த தொலைபேசி திருத்தும் கடையில் பணியாற்றும் இளைஞர்கள் சிலரின் இந்த செயற்பாடு மிகவும் மோசமான செயல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த காலங்களிலும் முல்லைத்தீவில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் விடயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
எனவே பெண்பிள்ளைகளை கொண்ட பேற்றோர்கள் தொலைபேசி திருத்தும் கடைகளில் கொடுக்கும்போது மிகவும் அவதானமாக இருங்கள்.