முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்தே கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.