இலங்கை அணிக்கு எதிரான நியூசிலாந்து ( New Zealand) ரி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கான கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இத்தொடருக்கான நியூசிலாந்து அணி தலைவராக மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் கிளென் பிலிப்ஸ் (Glenn Phillips) , லோக்கி ஃபெர்குசன் (Lockie Ferguson), மைக்கேல் பிரேஸ்வெல் (Michael Bracewell), மார்க் சாப்மேன், இஷ் சோதி, ஹென்றி நிக்கோலஸ், வில் யங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மிட்ச் ஹே மற்றும் நாதன் ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் கேன் வில்லியம்சன் (Kane Williamson), மேட் ஹென்றி, டாம் லேதம், டேரல் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra )உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இந்த இரண்டு போட்டிகளிலும் 2-0 என்ற நிலையில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியானது மீண்டும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
அதன்படி நியூசிலாந்து அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ரி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.