இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாபயணிகளிற்கு எதிராக தாக்குதல் இடம்பெறலாம் என்ற தகவல்களை தொடர்ந்து கொழும்பு வெலிக எல்ல போன்ற பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக பொலிஸ்பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு வெலிகம எல்ல ஆகிய பகுதிகளில் யூதர்களிற்கான பிராத்தனை நிலையங்கள் காணப்படுவதாலேயே இந்த பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.
இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினர் இருவரை கைதுசெய்துள்ளதாக கூறிய பொலிஸ்பேச்சாளர் , ஒருவரை யாழ்ப்பாணத்திலும் மற்றையவரை கொழும்பிலும் கைதான நிலையில் அவர்களை தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.