கரையோர ரயில்வே மார்க்கத்தில் வஸ்கடுவ பகுதியில் தண்டவாளத்தின் ஓரிடத்தில் ஏற்பட்ட வெடிப்பால் இடம்பெறவிருந்த பெரும் விபத்து இரு இளைஞர்களின் விழிப்புணர்வால் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
திணக்கள தகவல்களில் இருந்து, களுத்துறை திசையில் இருந்து கொழும்பு திசை நோக்கி செல்லும் மேல் மார்க்கத்தில் 25வது மைல்கல் அருகில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் சுமார் 8 அங்குலம் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.
இதை அவதானித்த வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், அது தொடர்பில் களுத்துறை வடக்கு மற்றும் வாத்துவ ரயில் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி வாத்துவ ரயில் நிலைய அதிபர் யு. ஐ. பி.ரொட்ரிகு உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரதான ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கினர்.
அதற்கு அமைய வாத்துவ ரயில் மார்க்கத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று திருத்தப்பணிகளை மேற்கொண்டதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதோடு திருத்தப்பணியின் போது கரையோர ரயில்வே மேல் மார்க்கம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த இரு இளைஞர்களின் அறிவிப்பால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இளஞர்களுக்கு பல்லரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.