ஹோட்டலில் இருந்து வாங்கிய பிரியாணி உணவு பார்சலை சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த சிறுமியின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உணவுப் பொதியினை மேலும் மூவருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்த உணவை சாப்பிட்டதும் சிறுமிக்கு மட்டும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வாமையினை அடுத்து உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியை அவர் சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வாமை காரணமாக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் சகோதரரால் இரண்டு பிரியாணி உணவுப் பொட்டலங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை வீட்டில் வைத்து உண்ணப்பட்டதாக கிரியுல்ல பொலிஸ் நிலையப் பரிசோதகர் ஜனக சமரகோன் தெரிவித்தார்.



















