முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கொன்றின் மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், வழக்கு அடுத்த மாதம் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக கொழும்பு (Colombo) பிரதான நீதவான் திலின கமகேயால் இன்று (28.10.2024) தெரிவித்துள்ளார்.
வழக்கில் முதல் பிரதிவாதி
2016ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக வீதியை இடைமறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கில் முதல் பிரதிவாதியான விமல் வீரவங்ச இன்று மன்றில் முன்னிலையாகவில்லை.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முன்னிலையாகவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்
இதற்கமைய வழக்கு அடுத்த மாதம் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.